Tuesday, April 3, 2007

பொடா வழக்கிலிருந்து விடுதலை
தமிழக முதல்வருக்கு
நெஞ்சார்ந்த நன்றி
ஒரு கூட்டத்தில் கருத்துகளை வெளியிட்ட நிகழ்வைப் ‘பயங்கரவாதச் செயல்’ என்று அறிவித்து செயலலிதா அரசு, பலரையும் பொடா சட்டத்தின் கீழ்க் கைது செய்து ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகாலம் சிறையில் அடைத்தது. பிணையில் வெளிவந்த பின்னும் ­இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகப் பொதுக்கூட்டங்களில் பேசுவதற்குத் தடை விதித்திருந்தது.

தமிழகத்தில் கலைஞர் தலைமையிலான ஆட்சி ஏற்பட்டவுடன், மீண்டும் பேச்சு¡¢மை வழங்கப்பட்டது. அதன்பின் பொடா வழக்கையே திரும்பப் பெறுவதற்கான அரசு ஆணையும் வெளியிடப்பட்டது. அவ்வாணையை ஏற்று, பூவிருந்தவல்லியில் உள்ள பொடா நீதிமன்றம் ­இன்று (03.04.2007) காலை, பழ.நெடுமாறன், சுப.வீரபாண்டியன், புதுக்கோட்டை பாவாணன், தமிழ்முழக்கம் சாகுல்அமீது, மருத்துவர் தாயப்பன் ஆகிய ஐவரையும், ­ந்தியக் குற்றவியல் சட்டப்பி¡¢வு 321­ன் கீழ் விடுதலை செய்துள்ளது.

தமிழகத்தில் ஐனநாயகக் காற்று வீசுவதற்கு காரணமாக ­ருந்து, பொடாவிலிருந்து எங்களை விடுவித்திருக்கும் தமிழக முதல்வர் மாண்புமிகு கலைஞர் அவர்களுக்கும், தமிழக அரசுக்கும் என் சார்பிலும், தமிழ் முழக்கம் சாகுல்அமீது சார்பிலும், திராவிட ­இயக்கத் தமிழர் பேரவை சார்பிலும் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெ¡¢வித்துக் கொள்கிறோம்.

சுப.வீரபாண்டியன்
பொதுச் செயலாளர்
திராவிட ­இயக்கத் தமிழர் பேரவை

No comments:

தமிழ்நாடு