மக்களை கண்டுகொள்ளாத காவல்துறை
நேற்று (30.01.2008) இரவு தேனாம்பேட்டையிலிருந்து வேளச்சேரி நோக்கி அண்ணாசாலையில் செல்லும்போது நந்தனம் சிக்கனலில் இருந்து சைதைப் பகுதிக்கு சேரவே 30 நிமிடங்களுக்கு மேலானது. ஏன் தாமதம் என்பது குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. பின்னர்தான் தெரிந்தது சைதை விடுதியில் தங்கியிருக்கும் கல்லூரி மாணவர்கள் சாலைமறியல் போராட்டம் நடத்துகிறார்கள் என்று, எப்படியோ அண்ணாசாலை-உஸ்மான் சாலை சந்திப்புக்கு அருகில் வந்த போதும் வேளச்சேரி நோக்கி செல்வதற்கு காவல்துறையினர் எந்த வழியும் செய்துதரவில்லை. சைதாப்பேட்டையில் இருந்து வேளச்சேரி செல்வதற்கு சைதாப்பேட்டையிலிருந்து தியாகராய நகர் நோக்கி செல்லும் சாலையில் சென்று அரங்கநாதன் சுரங்கப்பாதை வழியாக செல்ல வேண்டும் என்று மட்டும் அங்கு இருந்த ஒரே ஒரு போக்குவரத்து காவலர் கூறினார்.
வேளச்சேரி செல்வதற்கு சைதாப்பேட்டையிலிருந்து கிண்டி சென்று (இதற்கு 30 நிமிடம்) பின்னர் சைதை சின்னமலை - நீதிமன்றம் வழியாக வேளச்சேரி செல்ல வேண்டுமாம். சாலையின் ஒரு பகுதியில் நடைபெற்ற சாலைமறியலால் காவல்துறையினர் சாலையின் மற்றொரு பகுதியிலும் போக்குவரத்தை நிறுத்திவிட்டனர். வானங்களில் சென்றவர்களுக்கு எரிபொருள், நேரம் வீணானது. பேருந்துகளில் சென்றவர்கள் போராட்டம் எப்போது முடியும் என்று எந்த அறிவிப்பும் இல்லாததால் நடந்தே சென்றனர் போக்குவரத்து காவலர்களின் உதவியின்மையால்.
கடந்த 25.01.2008 அன்று கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பேருந்தில் உள்ள ஆங்கில எழுத்துக்களை அழித்தவர்களை காவல்துறையினர் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
ஆனால் கல்லூரி மாணவர்கள் தினந்தோறும் பேருந்துகளில் தொங்கிக்கொண்டு பாடல் பாடிக்கொண்டு, பெண்களை கிண்டல் செய்துகொண்டு, பேருந்தை தட்டிக் கொண்டு மாணவர்கள் செய்யும் காலித்தனத்தை கண்டும் காணாமல் கண்டிக்காமல் இருக்கிறது காவல்துறை.
Thursday, January 31, 2008
Subscribe to:
Comments (Atom)